1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

வெண்டைக்காய் மோர் குழம்பு செய்ய.....!

குழம்பு வகைகளில் தனிச்சுவை பெற்றது இந்த மோர் குழம்பு. மோர் குழம்பில் நம் விருப்பத்திற்கு ஏற்ப வெண்டைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய் (வெள்ளை),  சேப்பங்கிழங்கு போன்ற காய்களை வைத்தும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்: 
 
தயிர் - 2 கப்
உப்பு - 1 தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வெண்டைக்காய் - 5
 
அரைக்க தேவையான பொருட்கள்:
 
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சரிசி - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 அங்குலம் 
பச்சைமிளகாய் - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் - 1 1/2 மேஜைக்கரண்டி துருவியது
 
தாளிக்க:
 
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
செய்முறை: அரிசி, பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து, அரைக்கும் பொருட்களுடன் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும். தயிரை சம அளவு நீர் சேர்த்து  மோராக்கிக்கொள்ளவும். வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும். 
 
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை வதக்க வேண்டும். நன்கு வதங்கி வரும்போது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வத்து கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளித்து, அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, பிறகு அடித்து வைத்துள்ள தயிரை சேர்க்க வேண்டும். சிறிது தண்ணீரும் சேர்க்க வேண்டும். கொதிக்கவிடாமல் அடுப்பிலிருந்து இறக்கவும். வெண்டைக்காய் மோர் குழம்பு தயார்.