சுவையான பலாப்பழ பாயசம் செய்ய....!

தேவையான பொருட்கள்:
 
பலாப்பழம் - 20 
தேங்காய் பால் - 2 கப் 
வெல்லம் - 150 கிராம் 
ஏலக்காய் தூள் - 6 (பொடியாக)
முந்திரி - தேவையான அளவு 
பிஸ்தா - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
 
பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி விட்டு தனியாக வைக்கவும். ஒரு பலாப்பழத்தை மட்டும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில்  தண்ணீர் ஊற்றி பலாப்பழத்தை வேக வைத்து ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி  வெல்லம் போட்டு நன்றாக கரைந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி ஒரு நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் மசித்து வைத்த பலாப்பழ விழுதை போட்டு அதன்பின் ஏலக்காய்த்தூள்,  தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும். சுவையான இனிப்பான பலாப்பழ பாயாசம் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :