செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

ரமலான் நோன்புக் கஞ்சி செய்ய...!

தேவையானவை:
 
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
கொத்து கறி - 100 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி - 2 கொத்து
புதினா - 2 தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
 
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர்  ஊற்றி பிழிந்து மறுபடியும் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற  வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை  தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, கொத்திய கறியை போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு, 2 நிமிடங்கள் வதக்கி முதல் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப்  பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். அரிசியையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி  விடவும். நன்கு வெந்து வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார்.
 
குறிப்பு: கஞ்சியில் கொத்துக் கறி இல்லாமலும் செய்யலாம். தேவைப்பட்டால் காய்கறிகளை சேர்த்தும் சமைக்கலாம்.