வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 12 நவம்பர் 2018 (19:29 IST)

மீண்டும் ஒரு ரகசிய சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு

சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ரகசியமாக சந்தித்ததாக செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இரு தரப்பினர்களும் விளக்கம் அளித்தும் ஊடகங்களில் இந்த செய்தி பல அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த சந்திப்பின் பரபரப்பு முடிவதற்குள் தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர், திமுக எம்.எல்.ஏ பெரியண்ணன் அவர்களை புதுக்கோட்டையில் ரகசியமாக சந்தித்து பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டபோது அங்கு திடீரென புதுக்கோட்டை எம்.எல்.ஏ பெரியண்ணன் வந்ததாகவும், இருவரும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் சிறிது நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து இருதரப்பினர்களும் கருத்து எதுவும் கூறாததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.