செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 நவம்பர் 2018 (20:29 IST)

பாஜகவுக்கு எதிரான தேசிய கூட்டணி: டெல்லியில் முதல் கூட்டம்

இந்தியாவில் அதிக மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் இந்த முயற்சியை தற்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எடுத்து வருகிறார். முதலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதன்பின்னர் தேவகவுடா, குமாரசாமி, மு.க.ஸ்டாலின் என சந்தித்து தேசிய அளவிலான கூட்டணிக்கு ஆதரவு கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய டெல்லியில் வரும் 22ஆம் தேதி கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் தேசிய அளவிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அனேகமாக சந்திரபாபு நாயுடு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.