அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான்: எடப்பாடி பழனிச்சாமி

Last Modified சனி, 10 நவம்பர் 2018 (19:44 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு, தினகரன் செய்த துரோகம், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்

தினகரன் குறித்த கேள்விக்கு, 'அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான் என்றும், அதிமுகவை உடைக்கும் பணியில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருவதாகவும், 18 எம்எல்ஏக்களால் தான் அவர்களின் தொகுதி முடக்கப்பட்டுள்ளதாகவும், துரோகம் செய்த காரணத்தால்தான் அவர்களுக்கு இறைவன் தக்க பாடம் புகட்டியுள்ளதாகவும் கூறினார்

அதேபோல் கூட்டணி குறித்த கேள்விக்கு, 'தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம் என்றும், 18 தொகுதிகள் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் அனைத்து திட்டப்பணிகளும் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து முதல்வர் கூறியபோது, ;'தமிழகத்திற்கு ஆந்திர அரசு வழங்க வேண்டிய நீர் குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் திமுக கேட்கவில்லை என்றும், திமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, அவர்களுக்கு தேவை அதிகாரம் மட்டுமே என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :