வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By vm
Last Updated : திங்கள், 11 மார்ச் 2019 (18:18 IST)

ஓடணுமா ... ஓட விடணுமா.. மகனுடன் மிரட்டும் விஜய்சேதுபதி! சிந்துபாத் டிரெய்லர்!

விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி'  ஆகிய படங்களை  இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து  சிந்துபாத் என்ற படத்தை இயக்கியுள்ளார்.


 
இந்த படத்தில்  விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இப்படத்தை ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. . இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் கடந்த வாரம் வெளியானது.
 
தற்போது  சிந்துபாத் படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதியும் நடித்துள்ளார்.
 
சிந்துபாத் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
வீடியோ இணைப்பு