திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 பிப்ரவரி 2019 (17:30 IST)

மணிரத்னம் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது நிஜமா...?

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் திடீரென்று அப்படத்தில் இருந்து விலையதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனையடுத்து அவரது ரசிகர்கள் இதில் எது உண்மை என்பது தெரியாமல் இருந்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறவில்லை , அவர் மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறிதாக சொல்லப்படும் தகவல் உண்மையல்ல எனவும் அவரது நட்பு வட்டாரங்கள் உறுதி பட தெரிவித்துள்ளனர்.மேலும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க விக்ரம் , விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரிடம் 6  மாதம் மணிரத்னம் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
இந்நிலையில் விஜய் சேதுபதி மணிரத்னம் படத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த செய்திகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.