திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 மே 2018 (23:22 IST)

நீட் தேர்வு மைய விவகாரம்: விஷால் செய்த உதவி

தமிழகத்தில் உள்ள ஒருசில மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களில் நீட் தேர்வுக்காக மையம் அமைக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ அமைப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் வெளிமாநிலத்திற்கு சென்று நீட் எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவிக்கரம் குவிந்து வருகிறது.
 
பல திரையுலக பிரபலங்கள் நீட் மாணவர்களின் செலவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
 
நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி தங்கைகளுக்கு உதவுவது என் கடமை. அவர்களுக்கு உதவி கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கின்றேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். போன் எண்: 97104 44442
 
இவ்வாறு விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நீட் மாணவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள விஷாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.