திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2024 (16:20 IST)

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் வெளியானது.

படம் வெளியானது முதல் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் படத்தின் ஒரே குறையாக படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் அரசியல் சித்தாங்களையோ பொன்மொழிகளையோ உதிர்த்துக் கொண்டே செல்கிறது. அந்த வசனங்கள் எல்லாம் அரசியல் விழிப்புணர்வு வசனங்களாக இருந்தாலும் சினிமாவில் அதைக் காட்சியாகதானே வைக்கவேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படம் வசூல் ரீதியாக நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வாத்தியார் பெருமாள் என்ற கதாபாத்திரம் மறைந்த புலவர் கலியபெருமாள் என்பவரை அடியொற்றிதான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக அவரது குடும்பத்தினருக்கு உரிமைத் தொகையாக ஒரு கணிசமானத் தொகையை படம் தொடங்குவதற்கு முன்பே படக்குழு கொடுத்து விட்டதாம்.