100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் சூர்யாவின் தலையீட்டால் கைவிடப்பட்டது. அந்த கதை இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றிய படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா நேரடி இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகிறது. படத்தில் சிவகார்த்திகேயனோடு ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவரின் 100 ஆவது படமாகும். இந்நிலையில் இந்த படத்துக்காக அவர் நான்கு பாடல்களைத் தற்போது உருவாக்கிக் கொடுத்து விட்டாராம். இனிமேல் படத்துக்கு அவர் பின்னணி இசை அமைக்க வேண்டியது மட்டும் பாக்கி என தகவல்கள் வெளியாகியுள்ளன.