1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (11:21 IST)

கமல்ஹாசன் காஃபி கொடுத்தார், பாதிக்குமேல் என்னால் பருகமுடியவில்லை: வைரமுத்து

மகா கவிதை என்ற நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இதில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்நூல் வைரமுத்துவின் 39வது நூல் ஆகும். இதற்கான அழைப்பிதழை வைரமுத்து கமல்ஹாசனிடம் நேரில் கொடுத்தபோது  நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து கவிதை வடிவில் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
 
மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி 
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்
 
எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன
 
கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்
இடறி நின்றது உரையாடல்
 
குடிதண்ணீர்
எண்ணெய் ஆவதும்
எண்ணெய்
தண்ணீரின் ஆடையாவதும்
 
காலங்காலமாய்க் 
கழுவப்படாத
கண்ணீர்ப் பிசுக்கில்
எண்ணெய்ப் பிசுக்கும்
ஏறி நிற்பதும்
 
மீனென்ற 
வேட்டைப் பொருளும்
கொக்கென்ற 
வேட்டையாடு பொருளும்
சேர்ந்து செத்து மிதப்பதும்
 
நதி இறங்க 
வழியில்லாத கடலில்
எண்ணெய் இறங்குவதும்
 
உழைக்கும் மக்கள்
பிழைக்க வழியின்றிப்
பெருந்துயர் கொள்வதும் 
 
எத்துணை கொடுமையென்று
சோகம் பகிர்ந்தோம்
 
‘இதற்கு யார் பொறுப்பு’
என்றார் கமல்
 
‘லாபம் ஈட்டும்
நிறுவனம்’ என்றேன்
 
காஃபி கொடுத்தார்
பாதிக்குமேல் என்னால் 
பருகமுடியவில்லை
 
Edited by Mahendran