புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (10:27 IST)

இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? வைரமுத்து கேள்வி

இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். 
 
 கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண் ஒருவர் இந்தி பேசவில்லை என மத்திய பாதுகாப்பு படையினர்  கூறியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 
 
இந்தி பேசாதவர்
இந்தியர் இல்லை என்று
அரசமைப்பில் இருக்கிறதா?
 
இந்தியா என்ற நாடு
இந்தி என்ற
சொல்லடியில்தான் பிறந்ததா?
 
எல்லா மாநிலங்களிலும்
புழங்குவதற்கு
இந்தி மொழியென்ன
இந்தியக் கரன்சியா?
 
இந்தி பேசும் மாநிலங்களிலேயே
இந்தி கல்லாதார் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா?
 
வடநாட்டுச் சகோதரர்கள்
தமிழ்நாட்டுக்குள் வந்தால்
தமிழ் தெரியுமா என்று
தெள்ளு தமிழ் மக்கள்
எள்ளியதுண்டா?
 
சிறுநாடுகளும்கூட
ஒன்றுக்கு மேற்பட்ட
ஆட்சிமொழிகளால்
இயங்கும்போது
இந்தியாவை
ஓர் ஒற்றை மொழிமட்டும்
கட்டியாள முடியுமா?
 
22 பட்டியல் மொழிகளும்
ஆட்சிமொழி ஆவதுதான்
வினாத் தொடுத்த காவலர்க்கும்
விடைசொன்ன 
தமிழச்சிக்குமான ஒரே தீர்வு
 
 
Edited by Mahendran