1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (10:26 IST)

நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது.. எண்ணூரில் ஆய்வு செய்த கமல்ஹாசன்

நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது என எண்ணூர் காட்டுகுப்பம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆய்வு செய்தார்.

எண்ணூரில் எண்ணெய் கசிவுகள் நடந்த இடத்தில் படகில் சென்று பார்வையிட்ட கமல்ஹாசன் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘இங்கு நான் பலமுறை வந்துள்ளேன், நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

இங்குள்ள கழிவுகளை அகற்ற டெக்னீசியன்கள் இல்லை. மீனவர்களே கழிவுகளை அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் இதுபோல நடக்கும் போது நிவாரணம் என போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

எண்ணெய் கழிவை சுத்தம் செய்ய வேண்டியது மீனவர்கள் அல்ல, அதற்கு டெக்னீசியன்கள் தேவை, இயற்கை என கூறி தப்பிக்க முடியாது. ஏழு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை தான் இன்றும் உள்ளது.

Edited by Siva