1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2025 (17:17 IST)

விஷால் பற்றி அவதூறு பரப்பும் ஊடக போர்வை போர்த்திய விஷம நபர்கள்! - விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம்!

Vishal

நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து தேவையற்ற கட்டுக்கதைகள், பொய் செய்திகளை சிலர் ஊடகம் என்ற பெயரில் வெளியிட்டு வருவதாக விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


 


 

விஷாலின் மதகஜராஜா படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியாக உள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டபோது அவர் உடல்நலம் குன்றி காணப்பட்டார். இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் குளிர் காய்ச்சல் காரணமாக அப்படி உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்தது. எனினும் சில ஊடகங்களில் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு ஊக செய்திகள் வெளியாகி வருவதை விஷால் மக்கள் நல இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக நடிகரும், தயாரிப்பாளரும், மக்கள் மீது அக்கறை கொண்ட சமூக சிந்தனையாளருமான விஷாலின் உடல்நிலை குறித்து சில விஷம எண்ணம் கொண்டவர்கள் பல அவதூறுகளையும், தங்களுக்கு தோன்றிய கதைகளையும் ஊடகங்கள் என்ற பெயரில் வெளியிட்டு விளம்பரம் தேடி கொள்கின்றனர்.

 

ஆனால் அதை தாண்டி அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் தலைவர் விஷால் மீது அக்கறை கொண்டுள்ள அவரது ரசிகர்களுக்கு மக்கள் நல இயக்கத்தின் உறவுகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.

 

நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்ட பின்பும், ஜனநாயகமிக்க ஊடகங்களுக்கு மத்தியில் ஊடக போர்வை போர்த்திய சில போலி தற்குறிகள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப காசுக்காக அவர் மீது போலியான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் கண்டனத்தையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K