சைலண்ட் ஆக பிரபாஸ் படத்தில் 3 நாட்கள் நடித்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.
கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் படக்குழுவினரோடு கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 12, 2024 என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்னமும் ஷூட்டிங் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டாலும், இதுவரை அவர் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது அவர் இந்த படத்தில் 3 நாட்கள் மட்டும் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவரின் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.