மகன் படம் ஹிட்டானால் புகைப் பிடிப்பதை விட்டுவிடுகிறேன்… அமீர்கான் உறுதி!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் கடைசி படமாக லால் சிங் சத்தா கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வி அடைந்தது. அதையடுத்து அவர் சினிமாவில் இருந்து அவர் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார்.
அதனால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இப்போது தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை அமீர்கான் தொடங்கியுள்ளார். அவர் நடிக்க உள்ள அடுத்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்தன.
இதற்கிடையில் அவரின் மகன் ஜுனைத் கான் லவ்யப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமீர்கான் “லவ்யப்பா படம் ஹிட்டானால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுகிறேன்” என உறுதியளித்து பேசியுள்ளார்.