ஓடிடியில் வெளியாகும் வைபவ்வின் மலேசியா டூ அம்னீஷியா
ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் ZEE 5 ஸ்ட்ரீமிங் தளத்துக்காக ராதாமோகன் ஒரு படத்தை இயக்கி வருகிறார். முழு நீள காமெடி படமான இதில் வைபவ்வும் பிரியா பவானி சங்கரும் நடிக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்களில், எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன்,மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு மலேசியா டூ அம்னீஷியா என பெயர் வைக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் இந்த படம் திரையரங்க வெளியீடாக இல்லாமல் நேரடியாக ஓடிடி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த படம் ஜி 5 தளத்தில் ரிலீஸாக உள்ளது.