செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (08:47 IST)

ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

வைபவ் மற்றும் முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரிக்கும் புதிய பேண்டஸி திரைப்படம் ஆலம்பனா. இந்த படத்தில் நடிகர் வைபவ்வுடன், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தை பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமாரின் உதவியாளர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில் நாட்களுக்கு முன்னர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அலாவுதீனின் அற்புத விளக்கு கதையை நியாபகப் படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அலாவுதீன் வேடத்தில் வைபவ் மற்றும் பூதத்தின் வேடத்தில் முனீஸ்காந்தும் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.