திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 10 ஏப்ரல் 2021 (16:17 IST)

அஜித் பட தயாரிப்பாளரின்’’ புதிய படம் ’’ வசூல் சாதனை !

அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர் தெலுங்கில் பவர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வக்கீல் சாப். இப்படம் நேற்று வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளது.

பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் வெளியானதை அடுத்து இப்போது தெலுங்கிலும் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் குறைந்த நேரத்தில் புதிய சாதனை படைத்தது.

 சமீபத்திய ஆண்டுகளில் வெளியான பெண்ணிய திரைப்படங்களில் மிக முக்கியமானது பிங்க் திரைப்படம். இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த அந்த திரைப்படம் தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்த இந்த திரைப்படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படத்துக்கு பெண்கள் ஆதரவு இந்த படம் மூலம் அதிக அளவில் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் இந்த படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. இப்படம் நிச்சயம் இப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழில் தயாரித்த போனி கபூரே தில் ராஜூட இணைந்து தயாரித்துள்ளார்.

தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியாகி உலக அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில், நேற்று இப்படம் உலகமெங்கிலும் ரிலீசானது.
இந்நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள வக்கீல்சாப் படம் இந்தக் கொரொனா காலகட்டத்திலும் உலகம் முழுக்க சுமார் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை பவர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.