வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2019 (14:53 IST)

சூப்பர்ஸ்டார் விஜய் - புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நாயகன்

தெறி, மெரசல் ஆகிய படங்களுக்கு விஜய் - இயக்குநர் அட்லி ஆகியோர் மூன்றாவது முறையாக இணைகின்றனர். 
 

 
இன்னும் பெயரிடப்படாததால் தளபதி 63 என்று அறியப்படும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். யோகி பாபு, டேனியல் பாலாஜி, கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேபோல், நடிகை ரெபா மோனிகா ஜான் கால்பந்து வீராங்கனையாக நடிக்கிறார்.
 
இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யுடன் நடிப்பது குறித்து பேசிய ஜாக்கி ஷெராப், விஜய் போன்ற ஒரு நடிகருடன் வேலைபார்ப்பது மிகச்சிறந்த அனுபவம். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், நான் நடித்த குத்ராத் கா கனூன் படத்தை இயக்கியவர். இதனால், சூப்பர்ஸ்டார் விஜய்யையும் அவரது தந்தையையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அதேபோல், அட்லியும் சிறந்த இயக்குநர். அவருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி என்று சிலாகித்திருக்கிறார்