வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 மார்ச் 2019 (11:33 IST)

'தளபதி 63 ' ரசிகர்கள் மீது தடியடி எதிரொலி! ஆக்க்ஷன் எடுத்த விஜய்!

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 
 

 
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி  வெளியாகி இணையத்தில் வலம் வருகின்றது. படப்பிடிப்பு வட சென்னைசுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவத்தல்  அதனை காண தினமும் நுற்றுக்கணக்காக ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் இருந்தனர். 
 
இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் கூட்டம்  அலைமோதியதையடுத்து  கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத  போலீசார் அவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 
 
இதனை அறிந்த விஜய் தனது ரசிகர்கள் மீது தடியடிநடந்துள்ளதை கேள்விபட்டதும் படப்பிடிப்பு தளத்தை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இதனையடுத்து படப்பிடிப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.