வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (21:00 IST)

'தளபதி 63: கால்பந்து டீமின் கேப்டனாக பிரபல நடிகை?

விஜய் நடித்து வரும் 'தளபதி 63' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதும் விஜய் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராகவும் நடித்து வருவது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த 'ஜருகண்டி' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
 
கால்பந்து டீமின் கேப்டன் கேரக்டர் என்பதால் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இதனால் நடிகை ரெபாவுக்கு இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் தமிழ்த்திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது