மகாபாரதத்தை மையப்படுத்திய புராணக்கதையில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இரு பாகங்களும் சேர்த்து 2200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளன.
இதையடுத்து இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகியுள்ளார் அல்லு அர்ஜுன். அடுத்து அவர் அட்லி இயக்கத்தில், பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முடித்ததும் அவர் த்ரி விக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் மகாபாரத்தைத் தழுவிய ஒரு புராணக் கதையாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.