ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (20:01 IST)

'தளபதி 63' படத்தின் மெயின் வில்லன் அறிவிப்பு

விஜய், நயன்தாரா நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மெயின் வில்லன் கேரக்டருக்கு சில பிரபலங்களுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் இந்த படத்தில் வில்லனாக இணைந்துள்ளார்.
 
இந்த படத்தின் மெயின் வில்லனாக நடிப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். இவர் ஏற்கனவே தமிழில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' மற்றும் சி.வி.குமார் இயக்கிய 'மாயவன்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'தளபதி 63' படத்திலும் இவர் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 
ஜாக்கி ஷெராப் 'தளபதி 63' படத்தில் இணைந்ததை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இந்த படத்திற்காக இவர் சுமார் ஒரு மாத காலம் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது