1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (15:49 IST)

லுங்கியை மடித்து கட்டிக்கிட்டு ஆட்டம் போடும் விஜய்.! லீக்கான தளபதி 63 பாடல் வீடியோ .!

தளபதி விஜய் - அட்லி கூட்டணி தெறி, மெர்சல் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.  
 

 
இன்னும் பெயர்வைக்கப்படாத இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும்  இந்தப் படத்தில் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
 
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்றதையடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், அடிக்கடி படிப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது. 
 
இப்படத்தின் ஷூட்டிங் வட சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுவருவதால் தினமும் நுற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கும்  குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் நடிகர் விஜய் லுங்கியுடன் ஒரு பாடல் காட்சிக்கு நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.