வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 26 ஜனவரி 2023 (10:20 IST)

விஜய் தேவரகொண்டாவுடன் ‘டூர்’ சென்றால் என்ன தவறு?- ராஷ்மிகா ஆவேசம்!

நடிகை ராஷ்மிகா தன் மீதான விமர்சனங்கள் குறித்து ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின.

இதுபற்றி பேசியுள்ள ராஷ்மிகா “ அவர் எனது நண்பர். அவருடன் டூர் சென்றால் என்ன தவறு” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.