வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 24 ஜனவரி 2023 (11:00 IST)

சென்னையில் டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை: 5 அடுக்கு பாதுகாப்பு

police
சென்னையில் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற இருப்பதை அடுத்து 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவின் பேரில், குடியரசு தின பாதுகாப்பு பணிகளில் மொத்தம் 6800 காவல் அதிகாரிகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 
 
மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சென்னை பெருநகர் முழுவதும் ரோந்து வாகனங்கள் தீவிரப்படுத்தபடும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran