வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (08:51 IST)

ட்ரோன்கள் பறக்க தடை; டெல்லிக்குள் நுழையும் பீரங்கிகள்! – குடியரசு தின பாதுகாப்பு தீவிரம்!

டெல்லியில் குடியரசு தின விழா ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு மற்றும் கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி டெல்லியின் எந்த பகுதியிலும் ட்ரோன்கள், பாராகிளைடர், ஆளில்லா குட்டி விமானங்கள், ஏர் பலூன்கள், பாரா மோட்டார்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 18ம் தேதி அமலுக்கு வந்த இந்த தடை பிப்ரவரி 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தடையை மீறி செயல்படும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 118வது பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுபோல இதுவரை இந்திய குடியரசு தின அணிவகுப்புகளில் பவுண்டர் ரக பீரங்கிகளே குண்டு முழங்க மற்றும் அணிவகுப்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை முதல்முறையாக இந்தியாவிலேயே முழுவதுமாக தயாரிக்கப்பட்ட 105 எம்.எம் பீரங்கிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

Edit by Prasanth.K