’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படத்தில் இடம்பெற்ற ஓஜி சம்பவம் என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில், படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான காட் பிளஸ் யூ என்ற பாடல் இன்று வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது.
தற்போது, அந்த பாடலின் வீடியோ வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். அவருடன் பால் டப்பா இணைந்து பாடியுள்ளார். மேலும், ராகேஷ் பாடல் வரிகளில் உருவாகிய இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இந்த பாடலில் அஜித்தின் நடனம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் இணையத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் திரையரங்கில் காணும்போது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.