செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:13 IST)

நான் சினிமாவை விட்டு விலகவேண்டுமா? – ட்ரோல்களால் மனம் உடைந்த ராஷ்மிகா!

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவரை பற்றி அதிகமாக பரவும் ட்ரோல்கள் மற்றும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலளித்து பேசியுள்ள அவர் “நான் சினிமாவை விட்டு விலகிவிட வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களுக்கு என்னோடு என்னதான் பிரச்சனை என்று சொல்லிவிடுங்கள். நான் உடல்பயிற்சி செய்தால் ஆண் போல இருப்பதாக சொல்கிறீர்கள். இல்லையென்றால் குண்டாக இருப்பதாக சொல்கிறீர்கள். அமைதியாக இருந்தால் திமிர் என்கிறீர்கள். உங்கள் வார்த்தைகள் என்னை மனதளவில் பாதிக்கின்றன ” என ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.