1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (14:31 IST)

பிரபாஸின் ''ஆதிபுரூஸ்'' பட டீசர் சாதனை ....

adipurush
பிரபாஸ், சாயிஃப் அலிகான் ஆகியோர்  நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுரூஸ் என்ற பட டீசர் வெளியாகி  சாதனை படைத்துள்ளது.

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில்  உருவாகிவரும் படம் ஆதி புரூஸ். இப்படத்தை ஒம் ராவன் இயக்கி வருகிறார்.ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிவரும் படமான ஆதி புரஸில்  , ராமனாக பிரபாஸும், கீர்த்தி சனோன் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் .  சாயிப் அலிகான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார்.


ரூ.500 கோடி பட்ஜெடில் உருவாகியுள்ள இப்படம்   அடுத்தாண்டு  ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

 
இந்த  நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது. இதற்கு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இருந்தபோதிலும், இந்த டீசர் சாதனை படைத்துள்ளது. இந்த டீசர் வெளியான 18 மணி நேரத்தில் 6 கோடியே 18 லட்சத்து 46 ஆயிரத்து 244 பேர் பார்த்துள்ளனர். சுமார் 91,093 கமெண்டுகள் குவிந்துள்ளத். 9.8 லட்சம் பேர் இதற்கு லைக் செய்துள்ளனர்.

Edited by Sinoj