பாலிவுட் நடிகையோடு பிரபாஸ் டேட்டிங்கா? சமூகவலைதளங்களில் பரவும் தகவல்!
நடிகர் பிரபாஸ் பாகுபலி வெற்றிக்குப் பின்னர் பேன் இந்தியா ஸ்டார் ஆகி பன்மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகரான பிரபாஸை பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றி இன்று இந்திய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக்கியுள்ளது. அதையடுத்து அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய இருபடங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. இப்போது ஆதிபுருஷ் உள்ளிட்ட இரண்டு பேன் இந்தியா திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் தன்னோடு நடிக்கும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோனுடன் பிரபாஸ் டேட்டிங்கில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும் இரு தரப்பு வட்டாரங்களும் மறுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.