வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 அக்டோபர் 2021 (16:59 IST)

பீஸ்ட் படத்தில் நடிக்கும் செய்தி வாசிப்பாளர்!

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு நடிக்கிறாராம்.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்த பாடல் பணிகளில்தான் இப்போது அனிருத் ஈடுபட்டு வருகிறாராம். இந்த பாடல் தமிழ் மற்றும் அரபு ஆகிய மொழிகளில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.