’’பீஸ்ட்’’ பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்! படக்குழு அதிர்ச்சி

sinoj| Last Updated: புதன், 13 அக்டோபர் 2021 (16:58 IST)தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும்
மூன்றாம்
கட்டப் படப்பிடிப்பு டெல்லியிலும் நடைபெற்றது.


இந்நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

பீஸ்ட் படத்தின் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் இப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது படக்குழுவினருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்த பாடல் பணிகளில்தான் இப்போது அனிருத் ஈடுபட்டு வருகிறாராம். இந்த பாடல் தமிழ் மற்றும் அரபு ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :