திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

மறைந்த தந்தைக்கு கவிதையால் இரங்கல் தெரிவித்த நா முத்துக்குமார் மகன்

மறைந்த தந்தைக்கு கவிதையால் இரங்கல்
பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் மிகப்பெரிய அளவில் தமிழ் திரையுலகில் புகழ் பெற்ற நிலையில் திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது 
 
இந்த நிலையில் நா முத்துக்குமாரின் மகன் ஆதவன், தந்தையின் பிறந்த நாளை அடுத்து அவருக்கு ஒரு கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் கவிதை பின்வருமாறு:
 
என் தந்தை
 
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.
 
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்
 
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்
 
அவர் எங்கள் காட்டில் சிங்கம்
 
என் தந்தையின் வரிகள் முத்து
 
அவர்தான் எங்களின் சொத்து
 
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
 
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்
 
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
 
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா
 
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா
 
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா
 
மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்