ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (16:38 IST)

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார்.

இந்த படத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்த நிலையில் அவர் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக விலகிவிடவே ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூகவலைதளப் பக்கத்தில் ராஷ்மிகா பகிரும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.