கொரோனா இல்லைனா ஜெயில்ல போடுங்க! – சிறைத்துறை அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் சிறை கைதிகளிடையே கொரோனா பரவாமல் இருக்க புதிய சுற்றறிக்கையை சிறைத்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் சிறைகளில் உள்ள கைதிகளிடையேயும் கொரோனா தொற்று சிலருக்கு உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிறைகளில் கைதிகளிடையே கொரோனா பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் புதிதாக வரும் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி ஆன பிறகே சிறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், விடுப்பில் சென்று வரும் கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் என்று சுற்றறிக்கை வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.