சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் புரமோஷனின் போது பல இடங்களில் "இந்த படம் நெருப்பு போல் இருக்கும்" என்று சூர்யா கூறியுள்ளார். உண்மையில் நெருப்பு போல் இருந்ததா என்பதை இப்போது பார்ப்போம்.
ஆராய்ச்சி மையம் ஒன்றில் சிறுவர்களின் மூளை திறனை அதிகரிக்க சோதனை நடைபெற்று வருகிறது. அந்த நிலையில் திடீரென ஒரு சிறுவன் அந்த ஆராய்ச்சி நிலையத்திலிருந்து தப்பிக்கிறான். கோவாவில் குத்தாட்டம் போடும் சூர்யாவுடன் அந்த சிறுவன் அறிமுகமாகும் போது, அந்த சிறுவனை தேடி ராணுவ பலம் கொண்ட நபர்கள் கோவாவுக்குள் நுழைகின்றனர். சூர்யா, அந்த சிறுவனை காப்பாற்றுகிறார். அந்த சிறுவனுக்கும் சூர்யாவிற்கும் என்ன சம்பந்தம்? என்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த படத்தின் மீதி கதை அமைந்துள்ளது.
இயக்குனர் சிவா, கலை இயக்குனர், கிராபிக்ஸ் கலைஞர்கள் உள்பட அனைவரும் உண்மையில் தங்கள் உழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சூர்யா, படம் முழுக்க வந்து சிறப்பாக நடித்துள்ளார். திரையரங்கில் அவரது படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனதை எடுத்துக்கொண்டு, இந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்ற அவரது முயற்சி ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாக இருந்தாலும், திரைக்கதை மிகவும் பலவீனமாக இருப்பது படத்தின் முக்கிய குறையாக அமைந்துள்ளது. கிராம்பிக்ஸ் ,அகலை, சண்டைக் காட்சிகள் சூப்பராக இருந்தாலும், கதை மற்றும் திரைக்கதையில் கோட்டை விட்டதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
Edited by Siva