திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (15:21 IST)

கலைஞர் மீது பற்றுக்கொண்ட முத்து! – நா.மு குறித்து உதயநிதி ட்வீட்!

கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை இன்று பலர் கொண்டாடி வரும் நிலையில் நா.முத்துக்குமாருடனான தனது அனுபவங்களை உதயநிதி பகிர்ந்துள்ளார்.

திரையிசையில் இன்று இளைஞர்களின் மிகப்பெரும் ஆதர்சமாக இருப்பவர் கவிஞர் நா.முத்துக்குமார். சில ஆண்டுகள் முன்பு அவர் உடல்நல குறைவால் இளம் வயதிலேயே இறந்துவிட்ட நிலையிலும், அவரது பாடல் வரிகள் இன்றும் அனைவரிடமும் உயிர்ப்புடன் உள்ளன. நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை அவரது கவிதைகளுடன் பலர் கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்து உதயநிதி ஸ்டாலினும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இலக்கியத்தை ஜனரஞ்சகமாக்கி பட்டிதொட்டிகளை தொட்ட கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று. என் முதல் படமான OKOK-வில் அனைத்து பாடல்களையும் எழுதி படம் வெளியாவதற்கு முன்பே என்னை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். கழகம் மீதும், கலைஞர் மீதும் பற்று கொண்ட முத்து சட்டென மறைந்தது பெருஞ்சோகம்!” என   நா.முத்துக்குமாருடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.