செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 11 ஜூலை 2020 (23:10 IST)

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்த போலீசார்

கரூர் வாங்கல் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள் பறிமுதல்.

கரூரில்  கடந்த சில தினங்களாகவே  மணல்  கடத்தலில் காவேரி  மற்றும் அமராவதி  ஆற்றுப்பகுதில் ஈடுபட்டு  வருவதன் காரணமாக  போலீசார்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமூர்,எல்லை மேடு, தண்ணீர்பந்தல் பாளையம் உள்ளிட்ட பகுதியில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் அள்ளி வந்து லாரியில் கடத்தப்படுவதாக  வந்த போலீசாருக்கு தகவலின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட முயன்ற ஒருவர் தேவராஜ் என்பவர்  பரமத்தி வேலூர் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த டிரைவர் கைது மற்றும் இரண்டு லாரி டிரைவர்கள்  தப்பி ஓட்டம் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன வாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு லாரி டிரைவர்கள் தப்பி ஓட்டம் போலீசார் தேடி வருகின்றனர்