துப்பாக்கியோடு வடிவேலு… மிரட்டலான மாமன்னன் முதல் லுக் போஸ்டர்!
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது இசையமப்பாளர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இசையமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆக வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் படத்துக்கான டிஜிட்டல் உரிமையாக சுமார் 23 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாமம்மன் முதல் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவே முன் கூட்டி ரிலீஸ் செய்தனர். முதல் லுக் போஸ்டரில் வடிவேலு வேட்டி சட்டையில் கையில் துப்பாக்கியோடு அமர்ந்திருக்க, அவரருகே உதயநிதி கையில் வாளோடு அமர்ந்திருக்கும் விதமாக போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.