திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (08:10 IST)

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ராஜினாமா.. என்ன காரணம்?

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளதை அடுத்து அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எம்எல்ஏக்கள் மட்டுமே சிண்டிகேட் குழுவில் இடம் பெற முடியும் என்ற விதி இருப்பதை அடுத்து அவர் ராஜினாமா செய்துள்ளார். 
 
அதேபோல் ஆளுநரின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ரஞ்சனி பார்த்தசாரதி என்பவரும் ஓய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக மாற்று நபரை நியமனம் செய்ய ஆளுநர் மாளிகைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு தெரிவித்துள்ளது
 
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் மாற்றப்பட்டதாகவும் அவருக்கு பதில் புதிய சிண்டிகேட் உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva