வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2023 (14:49 IST)

''மாமன்னன்'' பட புதிய அப்டேட்....தயாரிப்பு நிறுவனம் தகவல்

Mamannan
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்ற்னர்.

இப்படத்திற்கு  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே வரும்  ஜூன் மாதம்  29 ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு போஸ்ட் புரடக்சன்  வேலைகள் செய்து வருகின்றது.

மாமன்னன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்று ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில்,  மாமன்னன்#MAAMANNAN  பட அப்டேட் லோடு ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று மாலை  மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.