1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By vinoth
Last Modified: வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (09:10 IST)

உதயநிதியால் தள்ளிபோகும் சிவகார்த்திகேயன் மாவீரன்… பின்னணி என்ன?

இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாமன்னன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் படத்துக்கான டிஜிட்டல் உரிமையாக சுமார் 23 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொகை, இதுவரை உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும். மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

இதனால் அதே நாளில் ரிலீஸ் திட்டமிடப்பட்டு இருந்த மாவீரன் திரைப்படம் தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மாவீரன் படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.