செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (07:28 IST)

ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து காட்பாதர் திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் அங்கிருந்த படியே அவர் இந்தியன் 2 பட வேலைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் வயதைக் குறைத்துக்காட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் ஷங்கர் பதிவிட்டிருந்த புகைப்படமும் கவனம் பெற்றது.

இந்நிலையில் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் மியூசியத்தில் கமல்ஹாசன் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானோடு இணைந்து ஹாலிவுட் கிளாசிக் படமான காட்பாதர் திரைப்படத்தைப் பார்த்துள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.