திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (17:38 IST)

கமல்ஹாசன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்

மக்கள் நீதி மையம் கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் ஆண்டு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன் கட்சிக் கொடி மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்து வைத்தார்.  அப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இந்த  நிகழ்வில் பங்கேற்றனர்.

இக்கட்சியில்  கவிஞர் சினேகன், ஸ்ரீபிரியா, உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்தனர்.

பின்னர், கடந்த தேர்தலில் தோல்வியை அடுத்து அக்கட்சியின் மகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகினர்.

இந்த நிலையில்,  மக்கள் நீதி மையம் கட்சியின் ஸ்பெஷல் போர்ஸ் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.