திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (13:36 IST)

அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம் -கமல்ஹாசன்

kamalhasan
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மக்களின் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டார். ஏவுகணைநாயகன் என்று அழைக்கப்பட்ட அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள் தயாரித்து கொடுத்தார்.

எளிமையாக வாழ்த்த அவர்,தன் பதவி காலத்திலும் சரி, அவர் பதவியில் இருந்து விலகிய பின்னும் தன் வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்று வாழ்ந்தவர் ஆவார். லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய சாதனையாளர்.

இளைஞர்களே கனவு காணுங்கள்…தூங்கும்போது வருவதல்ல கனவு, உங்களை எது தூங்கவிடாமல் செய்வதே கனவு என்று கனவிற்கு புதிய அர்த்தம் கொடுத்தார்.

அப்துல்கலாம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி காலமானார்.

இவரது 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர், ஒரு பொன்னுலகைக் கனவு கண்டு அதை மாணவ சமுதாயத்திடம் விதைத்துப் போனவர், சூழியலும் நாட்டின் சூழ்நிலைகளும் மேம்பட தன் சிந்தனை மொத்தமும் செலவிட்டவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அந்தப் பெருமனிதரை இந்நாளில் நினைவு கூர்வோம்’’ என்றூ தெரிவித்துள்ளார்.