செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (14:52 IST)

அவ்வை சண்முகி மேக்கப் கலைஞரை அமெரிக்காவில் சந்தித்த கமல்.. வைரல் புகைப்படம்..!

சமீபத்தில் அமெரிக்கா சென்ற கமல்ஹாசன் அங்கு அவ்வை சண்முகி உட்பட ஒரு சில திரைப்படங்களுக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றிய  மைக் வெஸ்ட்மோர் என்பவரை சந்தித்தார். 
 
கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி, இந்தியன் மற்றும் தசாவதாரம் உள்ளிட்ட படங்களுக்கு மேக்கப் கலைஞராக பணியாற்றியவர்  மைக்கேல் வெஸ்ட்மோர். இவர் ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கமலஹாசன் தற்போது அமெரிக்க பயணத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தனது நண்பர் மைக்கேல் வெஸ்ட்மோர் அவர்களை சந்தித்தார். இருவரும் தங்களுடைய நாற்பது ஆண்டு கால நட்பை நினைவுக்கு  கொண்டுவந்து  சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva