வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (16:50 IST)

ஆதர்ச நாயகனை கண்ட உலக நாயகன்!- டைமிங்கில் போட்டோ எடுத்த ஆஸ்கர் நாயகன்!

Kamalhassan
ஆஸ்கர் ம்யூசியத்திற்கு சென்ற கமல்ஹாசன் பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் ப்ராண்டோவின் படத்தை பார்த்ததை ஏ.ஆர்.ரஹ்மான் படமெடுத்து பதிவிட்டுள்ளார்.



கோலிவுட் சினிமாவில் உலக நாயகனாக கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். உலகளாவிய திரைப்படங்கள் குறித்த அனுபவ ஞானம் கொண்டவர் கமல்ஹாசன். தனது ஆதர்சமாக கமல்ஹாசன் கருதும் பிரபல நடிகர்களில் ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் மார்லன் ப்ராண்டோவும் ஒருவர். மார்லன் ப்ராண்டோ நடித்த காட்பாதர் திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலமானது. சினிமா இயக்குனர்களுக்கு இன்றும் பாலப்பாடமாக இருக்கும் படம் காட்பாதர்.

தற்போது உலக நாயகன் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் ம்யூசியத்திற்கு பயணம் செய்துள்ளனர். அங்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கிய தருணங்களை அவர்கள் நினைவுக் கூர்ந்தனர்.

பின்னர் கமல்ஹாசன் தனது ஆதர்ச நாயகரான மார்லன் ப்ராண்டோவின் காட்ஃபாதர் படத்தை ஆஸ்கர் ம்யூசியத்தில் கண்டு களித்தார். மார்லன் ப்ராண்டோவை உணர்ச்சி பெருக்குடன் கமல்ஹாசன் கண்ட காட்சியை சரியான நேரத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “One G.O.A.T watching another G.O.A.T